நாட்டில் அரச பாடசாலைகளில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் வெற்றிடங்கள்

திங்கள், 4 டிசம்பர், 2023

நாட்டில் நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச பாடசாலைகளில் பணிபுரியும் வேளையில் பரீட்சை நடத்தி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண கல்வி அமைச்சு எடுத்த தீர்மானங்களை எதிர்த்து 
மாகாண கல்வி அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை.04-12-2023. இன்று  எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் 
தெரிவித்தார்.  
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  விராஜ் தயாரத்ன, பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் நீதித்துறைச் செயற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் வெற்றிடங்களை நிரப்புவதில் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
இதனால் அரச பாடசாலைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக