கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்ததன் காரணமாக இருதய நோயாளர்களின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு இயந்திரங்கள் உள்ளதாகவும் மற்றைய இயந்திரமும் அடுத்த சில தினங்களில் பழுதடையும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆபத்தான சூழ்நிலையால், ஆஞ்சியோகிராம்
பரிசோதனைகள் (இதயத்திற்கு ரத்தம் வழங்கும் கரோனரி தமனிகளில் அடைப்பு கண்டறிதல், ஸ்டென்டிங் சிகிச்சைகள், இதயத்தில்
ஓட்டைகளைக் கண்டறிதல், இதய வால்வுகளில்
குறைபாடுகளைக் கண்டறிதல்) முற்றிலுமாக சரிந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து புதிய இயந்திரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என சுகாதார வல்லுநர்கள் அறிஞர் சங்கத்தின் உறுப்பினர் திரு.சானக தர்மவிக்ரம
தெரிவித்தார்.
இந்த இயந்திரத்தின் பராமரிப்புக்காக 26 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், உரிய இயந்திரம் பேணப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுகாதார வல்லுநர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக