அமெரிக்காவில் திடீரென மயங்கிச் சரிந்த சாரதி 70 பேரை காப்பாற்றி சிறுவன்

திங்கள், 1 மே, 2023

அமெரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதி மயங்கிய நிலையில், 13 வயது சிறுவனொருவன் பஸ்ஸை பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களின் உயிரி காப்பாற்றிய சம்பவம் 
ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை (26) அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாரென் நகரிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து சுமார் 70 மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.
இதன்போது திடீரென பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்த 
நிலையில் சாரதி உணர்விழந்தார். அப்போது, டிலோன் றீவ்ஸ் 
எனும் மாணவன் சாரதி ஆசனத்தை நோக்கி ஓடிவந்து, 
சுக்கானை சரியாகப் பிடித்து பஸ்ஸை கட்டுப்படுத்தியதுடன், ஹேண்ட் பிறேக்கை இயக்கி வீதியின் மத்தியில் பஸ்ஸை நிறுத்தினான் என உள்ளூர் கல்வி வலய அத்தியட்சகர் ரொபர்ட் லிவர்னோய்ஸ்
 தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பஸ்ஸில் 5 வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த டிலோன் றீவ்ஸ், நிலைமையை உணர்ந்து சாரதி ஆசனத்தை நோக்கி ஓடிவந்தான். பஸில் இருந்த சக மாணவர்கள் வீறிட்டுக் கொண்டிருந்த நிலையில். அவன் தனது காலை பிறேக் மீது வைத்ததுடன், பின்னர் ஹேண்ட் பிறேக்கை இயக்கி பஸ்ஸை நிறுத்தினான்
இந்நிலையில் உடனடியாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய 13 வயது மாணவருக்கு பலரும் பராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.என்பது  குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக