தற்போது 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விலை குறையும் வரை விவசாயிகள் தேவையான யூரியா உரத்தை தாமதமின்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,22-05-2023.
இன்றுமுதல்
வழங்கப்படும் உர மானியச் சீட்டுக்கள் மூலம் பண்டி உரத்தை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக