தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

வெள்ளி, 26 மே, 2023

யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் ஒன்றில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர்  தெல்லிப்பழைப் பொலிஸாரால்26-05-2023.. இன்றைய தினம்  கைது 
செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆசிரியர் 3 மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கில் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை மிரட்டும் 
வகையில் செயற்பட்டுள்ளனர்.
அதாவது, பாதிக்கப்பட்ட மாணவனின் அண்ணன் அதே பாடசாலையில் கல்வி கற்றுவரும் நிலையில் குறித்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற 
விடமாட்டோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த விடையம் தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு 
செய்யப்படவுள்ளது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக