நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

ஞாயிறு, 28 மே, 2023


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் 
உறுதியளித்தார்.
இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, Cinnamon Air,Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக