மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்

செவ்வாய், 9 மே, 2023

மஞ்சளில் பல மருத்துவக் குணங்கள் அதிகளவில் உள்ளது. இருந்தப் போதும் பித்தப்பை பிரச்சனைகள், நீரழிவு நோயாளிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் போன்ற உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என 
கூறப்படுகின்றது.
சைவம், அசைவம் என எந்த சமையலிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கப்படும்.
இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு இருப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் பாலில் அல்லது சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
சுகாதார ஆய்வறிக்கையின் படி ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மல்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை 
உபயோகிக்கலாம்.
இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. 
மஞ்சள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
மஞ்சளில் பல்வேறு நோயெதிர்ப்பு பண்புகள் மட்டுமில்லாது தொடர்ச்சியாக மஞ்சளை நாம் சாப்பிட்டு வரும் போது இதில் உள்ள குர்குமினால் டிமென்சியா என்ற நினைவாற்றல் இழப்பு செயல்திறனை மேம்படுத்த 
உதவியாக உள்ளது.
இருந்தப்போதும் சில நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய நிலையும் உள்ளது.பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 
நீரிழிவு நோயாளிகள்
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
ஒருவேளை நீங்கள் அதிகளவு உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
இரப்பை பிரச்சனை உள்ளவர்கள்
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு அல்லது GERD உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்களது உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடும்.மஞ்சளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள இரும்புச்சத்துக்களை குறைக்க நேரிடுகிறது.
ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மஞ்சள் உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்.
கல்லீரல் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவும்
உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால், மஞ்சளை உட்கொள்வது சில கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வயிற்று வலி, வயிற்றுக்கோளாறு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் மஞ்சள் அதிகளவு சாப்பிடுவதால் நேரிடும்.
என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக