மாணவர்கள் மீது ஹட்டனில் குளவித்தாக்குதல்: பாடசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை

புதன், 3 மே, 2023

 

ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் எல்பொடா தமிழ்க் கல்லூரிஇ மாணவர்களை குளவிகள் தாக்கியதால் பாடசாலை தற்காலிகமாக (02) மூடப்பட்டுள்ளதாக 
அதிபர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலர் மீது பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றில் கட்டடிப்பட்டிருந்த குளவி கூட்டில் இருந்த குளவி கொட்டியுள்ளது.
இதன் காரணமாக மூன்று பாடசாலை மாணவர்கள் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில்02-05-2023.அன்று  அனுமதிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்களையும்
 பெற்றோர்களையும் 
தாக்கிய குளவிகள் தம்மையும் தாக்கியதாகவும், குளவிகள் பாடசாலைக்குள் பிரவேசித்ததால் ஹட்டன் பிராந்திய கல்விப் பணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டு (02) பாடசாலை மூடப்பட்டுள்ளதாக 
அதிபர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு அருகாமையில் உள்ள குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு 
அறிவித்த போதும்.
குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க மறுத்த தோட்ட தொழிலாளர்கள். பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் குளவி கூட்டை எரித்து 
அழித்துள்ளனர்.
நிலவும் காலநிலையுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் மீது குளவிகள் தொடர்ச்சியாக தாக்குவதாக தோட்ட தொழிலாளர்கள்
 கூறுகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக