சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா நிபந்தனைகளை மீறி சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றிய பலஸ்தீன பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ, வேவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
32 வயதான வெளிநாட்டவருக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக