இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில்  முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை
 குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி 
செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 "முட்டை ஒரேயடியாக 6 ரூபாய் விலை 
குறைந்துள்ளது.
 இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று 
வருகின்றேன். தொடர்ந்து சோதனை செய்து
 வருகிறோம். 40 ரூபாய்க்கு கூட முட்டை விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய
 வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் பண்டிகை
 காலம் டிசம்பரில் தொடங்கும். கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
 இவர்களுக்கு தேவையான முட்டைகள் இல்லை என்றால், அவர்களுக்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை எனில், சரியான விலையில் முட்டைகளை வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்'' என்றார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக