நாட்டில் மொனராகலையில் பொது வைத்தியசாலையில் பரபரப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2024

 

நாட்டில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்று கொங்கிறீட் தடவ சென்ற போது, ​​கட்டுமான கட்டிடத்தை அண்டிய குழந்தை வார்டின் கூரை மீது கலவையான கான்கிரீட் அடுக்கு விழுந்து குழந்தை வார்டின் கூரை இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
அப்போது, ​​வார்டில் இருந்த பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது கான்கிரீட் சரிந்து விபத்து ஏற்பட்டது. இன்று (30.07.2024) காலை
 இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று சிசுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
விபத்து காரணமாக, வார்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  
எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளரிடம் கேட்ட போது, ​​எவருக்கும் காயம் ஏற்படவில்லை 
என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக