நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ஊடாக செல்லும் ரயில்கள் இரத்து

வியாழன், 11 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ரயில் பாதையில் புனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த பாதையின் 
போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.  
இதன் காரணமாக இன்று (11.01) கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் இரண்டு இரவு அஞ்சல் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், நாளை (12.1) காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு செல்லும் உதயாதேவி விரைவு புகையிரதம் மற்றும் மட்டக்களப்பில் 
இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
 வெள்ள நிலைமை காரணமாக நேற்றும் மட்டக்களப்பு மார்க்கத்தின் பல ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக