கனடாவில் கடந்த ஆண்டு வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாம்

வியாழன், 4 ஜனவரி, 2024

கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு வாகன விற்பனையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளது. ஓராண்டு கால இடைவெளியில் வாகன விற்பனை 11.8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
 டெஸ்ரோசியர்ஸ் ஒட்டோமோடிவ் கன்சல்டன்ட்ஸ் என்னும் நிறுவனம் வாகன விற்பனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டின் பின்னர் நாட்டில் கடந்த 2023ல் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவிட் காலத்தில் கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. குறிப்பாக 2023 டிசம்பர் மாதம் அனைத்து மாகாணங்களிலும் வாகன விற்பனை 
நல்ல பெறுமதியை பதிவு செய்துள்ளது. லைட் ட்ரக் ரக வாகனங்களின் விற்பனை 85.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக