நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண சந்தைகளின் நிலவரத்தின் படி, தற்போது முருங்கைக்காய் கிலோ மூவாயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, திருநெல்வேலிச் சந்தையில் நேற்றுமுன்தினம் முருங்கைக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. முருங்கைக்காய் சீசன் தற்போது இன்மையாலும் மழையால் பாதிக்கப்பட்டதனாலும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உருளைக் கிழங்கு வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதிகரித்து வருகின்றமை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக