நாய்க்கடிக்குள்ளான மாணவன் நீர்வெறுப்பு நோயால் யாழில் பலி

செவ்வாய், 23 ஜனவரி, 2018

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயால் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
வழி தவறித் திரிந்த நாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து, குறித்த சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும்
 கடித்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.
மேலும், அந்த மாணவனின் தாய் மற்றும் சகோதரி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கடித்ததாக கூறப்படும் நாயை
 கண்டுபிடிக்க, அப் பகுதி மக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், மாகாணத்தில் கட்டாக்கலியாக திரியும் அனைத்து நாய்களையும் பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக