இலங்கையில் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் மீளாய்வு

சனி, 3 செப்டம்பர், 2022

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று மீளாய்வு செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி நிர்வாகத்திடம் சரக்கு திட்டங்கள், உறுதிப்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும் சரக்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நிதிகள் என்பன தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், அடுத்த 2 மாதங்களுக்கு மசகு எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக 
அமைச்சர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக