நாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) முடிவடையும் நிலையில் , ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, சமுர்த்தி உறுப்பினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளிகள், டெண்டர் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் இந்தப் புதிய பதிவிற்குள் நுழைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை , தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக