நாட்டில் உயிரைப் பறிக்கும் வெய்யில்மக்கள் மிகுந்த அவதானமாம்

வெள்ளி, 4 மே, 2018


இலங்கையின் பல பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்பதனால், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனினும், கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியிலும் 
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு சென்று அழகை ரசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் பலர் சுட்டெரிக்கும் வெயில் காயும் காட்சிகள் 
கமராவில் பதிவாகியுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள அழகிய காட்சிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடும் வெயிலிலும் அதனை 
ரசிப்பதே இதன் ஊடாக பார்க்க முடிந்துள்ளது.சமகாலத்தில் இலங்கையில் நிலவும் கடும் வெப்பமாக காலநிலை காரணமாக உயிராபத்து ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக