வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டம் என்பவற்றில் நாளைய தினமும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும், வெயில் செல்வதை தவிர்த்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலன்னறுவை – பக்முன பிரதேசத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அங்கு 52.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மஹாஇலுப்பல்லம பிரதேசத்தில் அதிக வெப்பநிலையாக 35.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக
கூறப்படுகின்றது.

இதேவேளை, எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் கரதகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தள்ளனர்.
இதன்போது, பாரிய மரமொன்றும் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள,; வீதி சீர்செய்யப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக