நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளைகளில்
மழை பெய்யக்கூடும்.மேற்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்; காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரையோரப்பிரதேசங்களில்
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அத்துடன் பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல்
தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக