அரசாங்கத்தினால் கடந்த 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் தினசரி செலவீனம், அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள் என்பவற்றுக்காக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகின்றது.
அமெரிக்க டொலர் 160 ரூபாவை விடவும் அதிகரிக்க பிரதான காரணம் அரசாங்கத்தின் இந்த பணம் அச்சிடும் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் டொலரின் பெறுமானம் இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அடுத்து வரும் நாட்களில் சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு வழங்கவுள்ள அடுத்த கட்ட கடன் உதவி மற்றும் ஹம்பாந்தோட்ட துறைமுக குத்தகையின் மீதிப் பணம் என்பவற்றை வழங்கவுள்ளது. இதனால், குறுகிய காலப்பகுதிக்கு இந்த பண வீக்கம் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணம் அச்சிடுவது தொடர்பில் இதுவரை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படாதுள்ளதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியதில்லையெனவும்
குறிப்பிடப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக