முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது
.150 ற்க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின்
தீர்மானத்திற்கமைய தான் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.சாதாரண மாற்றம் தொடர்பில் தாம் கட்டணங்களை அதிகரிப்பதில்லை என அவர்
குறிப்பிட்டுள்ளார்.ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 150 ரூபாவை விடவும் அதிகரித்தால் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக