இலங்கையில் 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் விபத்தால் மரணம்!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இலங்கையில் வாகன விபத்துக்களால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் வீதி விபத்தால் இறக்கின்றான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு குழந்தை வீதி விபத்தால் இறக்கின்றது.
மேலும் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் பாதசாரி ஒருவர் உயிரிழக்கின்றார். வீட்டை விட்டு பல கனவுகளுடன் வரும் இவர்கள் வீதி விபத்துக்களால் தனது உயிரையை பறிகொடுக்கின்றனர்.
நீங்கள் வளரும் நாடு ஒன்றில் வசித்துவந்தால் உங்கள் வாழ்நாள் காலத்தில் ஒருமுறையாவது போக்குவரத்து விபத்தால் பாதிக்கப்படுவீர்கள் என புள்ளிவிவரம் காட்டுகிறது. அநேகருக்கு அத்தகைய விபத்துக்கள் சாவை முத்தமிட வைத்திருக்கின்றன.
வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒருவேளை அப்படிப்பட்ட நிலை தங்களுக்கு ஒருபோதும் வராது
 என நினைத்திருக்கலாம்.
எனவே அனைவரும் இது தொடர்பில் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக