விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் மஹாகால்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்திய சோதனையில் அவரிடம் கடவுச்சீட்டு உட்பட எந்த ஆவணங்களும் இருக்கவில்ல என பொலிஸார் கூறியுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த இவர், இலங்கைக்கு விஜயம் செய்யும் சீன சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த சீனப் பிரஜையிடம் 2705 அமெரிக்க டொலர்கள் 500 ஹொங்கொங் டொலர்கள் 161,000 இலங்கை ரூபாய் பணம் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.சீனப் பிரஜை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அவர் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், மற்றும் சுற்றுலாப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காலி துறைமுக பொலிஸார்
குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக