யாழ் அச்சுவேலியில் ஆடு திருடினர் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை, திருடப்பட்ட 3 ஆடுகளுடன் கைது செய்துள்ளோம் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் அச்சுவேலியில் மூன்று ஆடுகள் வீட்டிலிருந்து இரவு திருடப்பட்டுவிட்டன என்று அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில், இணையத்தளம் ஒன்றில் ஆடுகள் விற்பனைக்குள்ளன என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
அதைப் பார்த்த திருடப்பட்ட ஆடுகளின் உரிமையாளர், அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தா
அவற்றை விற்கவிருந்த நபர், தான் வேறொருவரிடமே ஆடுகளை 25 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கியதாக பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார். விற்றவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் அச்சுவேலியில் அவற்றைத் திருடி மோட்டார் சைக்கிள் மூலமாக வல்லை வீதிவரை கொண்டுசென்று அங்கிருந்து முச்சக்கர வண்டி மூலமாக நெல்லியடிக்குக் கொண்டுசென்று விற்பனை செய்ததாகக் கூறினர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர். அவர்கள் 27, 29, மற்றும் 26 வயதுடையவர்கள் என்று பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக