இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த விரைவில் தடை

சனி, 7 ஜூலை, 2018

 சாவுச் சடங்குகளில் வடக்கு மாகாணத்தில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகின்றது.வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
அவர் தனது பிரேரணையில், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொழுத்தும் கலாசாரம் காணப்படுகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.
இதனைக் கட்டுப்படுத்த மாகாண உள்ளூராட்சி அமைச்சு திணைக்களத்தின் ஊடாக அனைத்துச் சபைகளுக்கும் அறிவுறுத்தலை வழங்க வேண்டும். அதன் ஊடாகப் பட்டாசு கொளுத்துவது தடை செய்யப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் சபையில் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் குறித்த பிரேரணையை மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரிக்கும் பட்சத்தில், அது வடக்கு தமிழ் மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் விடயமென சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து உறுப்பினர்களும் இது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக