கழுத்தில் ஏறிய டிப்பர் ! தென்மராட்சி விபத்துகளில் 5 பேர் காயம்

வெள்ளி, 30 ஜூன், 2017

யாழ் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை திருத்த வேலையில் ஈடுபட்டிந்த இளைஞனின் கழுத்தின் மீது டிப்பர் வண்டியின் சில்லு ஏறியதில் அவர் படுகாயமடைந்தார். சாவகச்சேரி - கச்சாய் வீதியைச் சேர்ந்த, வடிவேலு சுமன் (வயது 28) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
டிப்பர் வாகனத்தில் திருத்த வேலையில் ஈடுபட்ட போதே, வாகனம் தானாக உருண்டு இளைஞரின் கழுத்தில் ஏறியுள்ளது. இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை, தென்மராட்சி பிரதேசத்தில் வெவ்வேறு வாகன விபத்துக்களில் சிக்கி 2 பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளிலிருந்து வீழந்த மட்டுவில் தெற்கைச் சேர்ந்த மனோகரன் சர்மிலன் (வயது-26) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 
அனுப்பி வைக்கப்பட்டார்.
இதே வேளை வீதி விபத்துக்களில் சிக்கி காயமடைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த சிறிதரன் சஜீதா (வயது-23) சரசாலை மத்தியைச் சேர்ந்த புலேந்திரன் சயந்தன் (வயது-27) கெற்பேலியைச் சேர்ந்த சயந்தன் கௌரி (வயது-26) ஆகியோர் சாவகச்சேரி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கழுத்தில் ஏறிய டிப்பர் ! தென்மராட்சி விபத்துகளில் 5 பேர் காயம்

வெடிக்காத நிலையில் உரும்பிராயில் கைக்குண்டு மீட்பு

யாழ் செய்திகள்யாழ்ப்பாணம் – உரும்பிராய், கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் கட்டட நிர்மாணப் பணி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மண்ணில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு ஒன்று  மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த கைக்குண்டை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக 
 தெரிவிக்கபடுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - வெடிக்காத நிலையில் உரும்பிராயில் கைக்குண்டு மீட்பு

மர்ம நபர்கள் தாக்கி மானிப்பாயில் இளைஞர் காயம்!

புதன், 28 ஜூன், 2017

மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே குறித்த நபரை தாக்கியுள்ளனர்
மானிப்பாய் - ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் இரவு எட்டு மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது
. இளைஞன் மீது 3 பேர் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் முகத்தை கருப்பு துணியால் மூடி இருந்ததாகவும், வாகன
 இலக்க தகடுகள் அகற்றப்பட்டு இருந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மர்ம நபர்கள் தாக்கி மானிப்பாயில் இளைஞர் காயம்!

உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடருந்து பாதைகளில் கடப்போர் மீது நடவடிக்கை!!


தொடருந்துப் பாதைகளில் நடப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்று இலங்கை தொடருந்துப் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன
 தெரிவித்தார்.
தமது அல்லது ஏனையவர்களது உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தான நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும், அவர்களுக்கு 3000 ரூபாவுக்கு அதிகமான தண்டப்பணம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
26 பாதுகாப்பு பிரிவு நிலையங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடல்மார்க்க தொடருந்துப் பாதைகளிலேயே அவர்கள் அதிகம் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளனர். – என்று அவர் குறிப்பிட்டார்.
கையடக்கத் தொலைபேசி பாவனை மற்றும் செல்பி எடுத்தல் என்பவற்றால் புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்கள் கடந்த பல மாதங்களாக அதிகரித்துள்ளது. அதையடுத்து தொடருந்துப் பாதைகளில் நடப்பதைத் தடுக்கும் சட்டம் கடந்த 14ஆம் திகதி 
நடைமுறைப்படுத்தப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடருந்து பாதைகளில் கடப்போர் மீது நடவடிக்கை!!

சாப்பாட்டுக்கடைக்குள்மட்டக்களப்பில் புகுந்த வான்!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த வானொன்று உணவு விடுதிக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உணவு விடுதியும் வானும் பலத்த சேதமடைந்துள்ள அதேவேளை, அதிஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. வான் விடுதிக்குள் நுழைந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் ஓடித் தப்பித்துக் கொண்டதாலேயே உயிராபத்து தடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - சாப்பாட்டுக்கடைக்குள்மட்டக்களப்பில் புகுந்த வான்!

வர்த்தகநிலையம் முழங்காவிலில் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம்


இன்று அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து  எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முழங்காவில் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு
 செய்யப்பட்டுள்ளது
இன்று அதிகாலை  பன்னிரெண்டு  நாற்ப்பத்தைந்து  மணியளவில் கடை உரிமையாளறிற்கு நண்பர்களால் கடை எறிவதாக வழங்கப்பட்ட  தகவலுக்கு அமைவாக கடை உரிமையாளரால் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் மற்றும் தீயணைப்பு பிரிவினரிற்கும்  தகவல் வழங்கப்பட்டதனை  அடுத்து
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவ  கடற்ப்படை நீர்த்தாங்கி வாகங்கள் உட்ப்பட தீயணைப்பு வாகனம்  என்பன தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுதும் கடை முற்றாக எரிந்து
 சாம்பலாகியுள்ளது
குறித்த தீ திட்டமிட்டு  மூட்டப்பட்டிருக்கலாம் என பொலிசாரால் சந்தேகிக்கப்படுகின்ற நிலையிலும் சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை  எனினும் மேலதிக விசாரணைகளை முழங்காவில்   பொலீசார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
READ MORE - வர்த்தகநிலையம் முழங்காவிலில் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம்

இன்று மின் விநியோகத்தடை அமுல் வடக்கில்!

சனி, 24 ஜூன், 2017

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தபடவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணிமுதல் மாலை 5.30 வரை மின்சார விநியோகம் தடைபடுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
இதற்கமைய,யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவாந்துறை, மீனாட்சிபுரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப்பிரதேசம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு முதலான பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், சிலாவத்தை, நாயாறு, கொக்குத்தொடுவாய்,  கொக்கிளாய் உள்ளிட்ட சில பகுதிகளிலும், வவுனியாவில், நெளுக்குளம் பாடசாலைப் பிரதேசம், கூமாங்குளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இன்று மின் விநியோகத்தடை அமுல் வடக்கில்!

தொல்லை கைத்தொலைபேசிஅழைப்புக்கள் கவனம்கவனம்!

இருபத்தெட்டு வயதான ஜெஹான் பெரேராவின் கைத்தொலைபேசிக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பொன்று கிடைத்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பாகும்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் தொலைபேசி மணி ஒருமுறை மாத்திரம் ஒலித்து துண்டிக்கப்பட்டதாகும். அதன் வெளிநாட்டு குறியீடு+1(797) என காணப்பட்டுள்ளது. அந்த இலக்கக் குறியீடு டொமினிக் இராச்சியத்துக்குரியது.
அங்கிருநது தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த ஒருவருமே இல்லை என உணர்ந்தார். அவர் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை.
இவ்விடயம் அவர் முன்பின் அறியாத இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது குறித்து செய்த முறைப்பாடு காரணமாகவே 
தெரிய வந்தது.
அவரைப் போன்று இந்நாட்டில் பலர் இந்நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சிலர் அதுகுறித்து முறைப்பாடுகளையும் செய்துள்ளார்கள்.
அவ்வாறு கிடைத்த முறைப்பாடுகள் அனைத்திலும் அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்தே அழைப்புகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தன. தொலைபேசி மணியும் ஒரு முறையே ஒலித்துள்ளது.
ஒரு தடவை மாத்திரம் ஒலித்து தொல்லை செய்யும் இவ்வழைப்பு ‘வன் ரிங் ஸ்கேம்’ () என அழைக்கப்படுகின்றது.
இந்த தொல்லை தரும் அழைப்புக் குறித்து பொது மக்கள் அறிந்திருக்க வேண்டுமென தொலைத் தொடர்பு சேவையில் பணியாற்றும் நிபுணர் கூறுகின்றார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கணனி அவசர நடவடிக்கை குழுவின் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்திரகுப்த மேற்குறித்த தொலைபேசி அழைப்பு மோசடியான அழைப்பென்று 
குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான அழைப்புகள் தொலைபேசி உரிமையாளரின் ஆவலைத் தூண்டுவதாக அமையும். ஆனால் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதால் கட்டணத்துக்காக சில வேளைகளில் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக கட்டணம் செலவானதாக சிலர் 
தெரிவிக்கின்றார்கள்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியொன்றில் இவ்வாறான சூழ்ச்சியில் சிக்கும் கைத்தொலைபேசி உரிமையாளர்கள் தொலைபேசி இணைப்புக்கு மாத்திரம் 19.95 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் அதைவிட உரையாடல் இடம்பெறும் காலத்திற்காக 9 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உங்களது அந்த அழைப்பினூடாக மோசடியாளர்கள் பெரும் பணம் ஈட்டுவதை நீங்கள் அறிவீர்களா? இங்கு நடைபெறுவது என்னவென்றால் நீங்கள் அழைப்பினை ஏற்படுத்த வசதி செய்து 
தரும் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து தரகுப் பணத்தை அவர்கள் பெறுவதாகும்.
சூழ்ச்சிக்கு உள்ளாகுபவர்கள் செலவிட்ட பெரும் தொகைப் பணத்தை எங்கேயும் அவர்களால் மீளப் பெற முடியாது. அது சட்டவிரோதமான கொடுக்கல் என்று எங்கும் விவாதிக்க 
இடமில்லை.
அப்போது அவர்கள் ஏன் அவ்வாறான அழைப்பினை ஏற்படுத்துவீர்கள் என்றே விவாதம் செய்வார்கள்.சில வேளைகளில் உங்களுக்கு தெரியாத இலக்கங்களில் இருந்து குறுஞ் செய்திகள் 
கிடைக்கக் கூடும்.
அவ்வாறான செய்திகள் அநேகமானவற்றில் ‘தயவு செய்து விரைவில் மீண்டும் அழையுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான குறுஞ் செய்திகளுக்கு பதில் அளிக்கும்போது மேலே குறிப்பிட்ட விதமே
 அனைத்தும் இடம்பெறும்.
மோசடியான அழைப்புகள் எமது நாட்டுக்கு எந்த நாட்டிலிருந்து கிடைக்கின்றன? அவற்றின் இலக்கக் குறியீடுகள் என்ன என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
அதன்படி புரூண்டி, மலாவி, பாகிஸ்தான் மற்றும் பெலரூசியா இராச்சியங்கள் மற்றும் மேற்கிந்திய திவுகளிலிருந்துமே மோசடியான அழைப்புகள் கிடைத்துள்ளன.
268, 809,876,254 மற்றும் 473 என்னும் இலக்க குறியீட்டுகளிலிருந்து கிடைக்கும் அழைப்புகள் மோசடியானவை என அறியப்பட்டுள்ளது.
இதைத் தவிர அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு இராச்சியத்திலிருந்தும் அழைப்புகள் கிடைத்துள்ளதாக முறைப்பாடுகள்
 கிடைத்துள்ளன.
எமது நாட்டு கைத்தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலைமையிலிருந்து பாவனையாளர்களை பாதுகாக்க இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு
 நடவடிக்கை எடுத்துள்ளது.
மோசடியான அழைப்பு என கருதும் அழைப்புகளைத் தடுத்து தனது பாவனையாளர்களை பாதுகாக்க கைத்தொலைபேசிச் சேவைகளை வழங்கும் இந்நாட்டு இரண்டு தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை 
எடுத்துள்ளன.
இவ்வாறான மோசடியான உபாயங்களிலிருந்து தப்புவதற்கு கைத்தொலைபேசி பாவனையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறான அழைப்புகள் குறித்து அவதானத்துடன்
 இருக்க வேண்டும்.
தான் இதுவரை அறியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பொன்று வந்து தவிர்க்கப்பட்டிருந்தால் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த வேண்டாமென தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - தொல்லை கைத்தொலைபேசிஅழைப்புக்கள் கவனம்கவனம்!

இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரணதர மாணவர்களும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வைத்து நேற்று(23) இரவு மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் குழுவினராகப் பிரிந்து வகுப்பறையில் 
மோதிக்கொண்டுள்ளனர்.
இதைனையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் இடத்தில் ஒன்றிணைந்த மாணவர் குழுவினர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் க.பொ.த சதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரவப்புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படுவதனால் மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெற்று வருகின்றதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக இப்பகுதியில் பொலிசாரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அதிகம் காணப்படும் கல்வி நிலையங்களும் மாணவர்களின் குழு தோதலுக்கு வழிசமைத்துள்ளதாக அப்பகுதி மக்களும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

இலங்கையில் பல பகுதியில் இன்று முதல் அடைமழை

வெள்ளி, 23 ஜூன், 2017


இலங்கயின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


சில இடங்களில் விசேடமாக கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம்
 கேட்டுக் கொண்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - இலங்கையில் பல பகுதியில் இன்று முதல் அடைமழை

கடன் அட்டையில் பெறப்படும் பணத்திற்கு , அதிகரிக்கும் வட்டி வீதம்

கடன் அட்டை மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கான பணம் இனி மீளச் செல்லுத்தப்படும்போது . அத் தொகை இன்வ்ரும் காலங்களில் அதிகரிப்பைக் காணப் போகின்றது .

இதுகால வரையில் கடன் அட்டை மூலமோ அல்லது , வேறு வழிகளிலோ கிடைக்கப்பெற்ற கடன் தொகைக்கான வருட வட்டி இதுகாலவரையில் 24 வீதமாக இருந்தது ,அடுத்த மாதம் முதலாந் திகதி தொடக்கம் , இது 4வீதத்தால் அதிகரித்து , 28 வீதமாகுமென்று, டெய்லி மிரர் பத்திரிகை தனது இன்றைய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற மாதம் மத்திய வங்கி , கடன் தொகைகளுக்கான வட்டித் வீதத்திற்கு இடப்பட்டிருந்த எல்லை வரம்பை நீக்கி இருந்தது . சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, வங்கிகளால் இனி வட்டி விகிதத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும் .
இந்த மாற்றம் பற்றி , ஏற்கனவே பல வாடிக்கையாளர்க்ளுக்கு வங்கி அறிவித்துள்ளமை இங்கே 
குறிப்பிடத் தக்கது ,

நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - கடன் அட்டையில் பெறப்படும் பணத்திற்கு , அதிகரிக்கும் வட்டி வீதம்

பிளாஸ்டிக் முட்டை ஏறாவூரில் சந்தையில்விற்பனை?

திங்கள், 19 ஜூன், 2017

 ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது.
பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது.

READ MORE - பிளாஸ்டிக் முட்டை ஏறாவூரில் சந்தையில்விற்பனை?

அதிரடி நடவடிக்கை பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ?

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட இடங்களைத் தவிர பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றும் மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்யப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இதற்கான பணிப்புரை
 வழங்கியுள்ளார்/
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - அதிரடி நடவடிக்கை பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ?

பரவிவரும் டெங்கு நோய் டெங்கு நோய் 177 பேர் உயிரிழப்பு.

 
நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோய் பரவல் காரணமாக இதுவரையில்  177 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரதுறை மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நிலையில் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல்வேறு நோய்கள் பரவிவரும் நிலையில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நாடாளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில்  177 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் கொழும்பு முதலாவதாக இனங்காணப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 14 ஆயிரத்து, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 
மேலும் டெங்கு நோயை  ஒழிக்க  சுகாதார சேவையாட்களுடன் இணைந்து இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும்  டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்கு 
 இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இலங்கையின் செயற்பாடுகளுக்கு அப்பால்  உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - பரவிவரும் டெங்கு நோய் டெங்கு நோய் 177 பேர் உயிரிழப்பு.

ஒருறம்புட்டான் பழம் ஒன்று யாழில் 10 ரூபாவாக விற்பனை செய்யப்படு கின்றது

ஞாயிறு, 11 ஜூன், 2017

றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு 
பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்டபகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
ஒருறம்புட்டான் பழம் 10 ரூபாவாக விற்பனை  
செய்யப்படுகின்றது 
நவக்கிரி இணையம் நியூ >>>



READ MORE - ஒருறம்புட்டான் பழம் ஒன்று யாழில் 10 ரூபாவாக விற்பனை செய்யப்படு கின்றது

மக்களே கவனம்!! நாட்டில் பிளாஸ்டிக் சீனி வந்துள்ளதுள்ளதாம்?

வெள்ளி, 9 ஜூன், 2017

நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சீனி வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து கொதிக்கும் பாலில் சீனியை போட்டுள்ளார். அப்போது பிளாஸ்டிக் உருகி வாசனை வந்துள்ளது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சீனியை கீழே கொட்டி பார்த்த போது வெள்ளை மணி போன்ற‌ பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் அந்த மளிகைக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த ஹசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஞ்சு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

மளிகை கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சமரசம் செய்த அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சீனி தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சீனி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக அமைச்சர் மஞ்சு,

பிளாஸ்டிக் சீனி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் பிளாஸ்டிக் சீனி தொடர்பாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைக்கப்பட் டுள்ளது.

இக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிளாஸ்டிக் சீனி எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்றும் எங்கு கலக்கப்படுகிறது என்றும் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் முட்டை விற்பனை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் 
 சீனி விற்பனை விவகாரம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் பிளாஸ்டிக் 
வரப்போகுதோ?
நவக்கிரி இணையம் நியூ >>>

READ MORE - மக்களே கவனம்!! நாட்டில் பிளாஸ்டிக் சீனி வந்துள்ளதுள்ளதாம்?

நவீன கார் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

வியாழன், 8 ஜூன், 2017

மலேசியாவின் Perodua நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற "Bezza" சேடான் ரக கார்கள் நேற்று இலங்கையில் அறிமுகம் 
செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் பிரதிநிதியான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிமோ என்டர்பிரைஸஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இது Peroduaவின் முதலாவது சேடான் ரக வாகனமாகும். 2016 ஆம் ஆண்டின் சிறந்த மலேசிய மோட்டர் வாகனமாக இந்த கார் விருது 
பெற்றுள்ளது.
இந்த மோட்டார் வாகனம் 1000 CC VVT-i இயந்திர திறனை கொண்டுள்ள நிலையில், Dual Air Bag, ABS, EBD போன்ற பாதுகாப்பு விடயங்கள் இந்த வாகனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனம் 3690,000/= என்ற விசேட விலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


READ MORE - நவீன கார் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

உங்களுக்கு வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா?

வெள்ளி, 2 ஜூன், 2017

தொடர்ந்து இதை 3 நாட்கள்  குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் 
இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அனைத்துமே அனைவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடி மாற்றங்கள் தெரியும், இன்னும் சிலருக்கு எடையில் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானத்தை மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும். சரி, இப்போது அந்த அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் வேறு சில நன்மைகள் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி – 1 கப் தண்ணீர் – 8 கப் சூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை: * முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும். * பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்துக் கலந்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்!
பயன்படுத்தும் முறை: இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இப்போது இந்த அரிசி பால் கஞ்சியைக் குடிப்பதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்து காண்போம்.
நன்மை #1 இந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்.
நன்மை #2 இந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
நன்மை #3 அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.
குறிப்பு உடல் எடையைக் குறைக்க அரிசி பால் கஞ்சியைக் குடித்தால், தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



READ MORE - உங்களுக்கு வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா?

மீன் களுக்கு யாழ். மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு

வியாழன், 1 ஜூன், 2017

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால், யாழில் மீன் வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சியில் தொண்டைமானாறு முதல் சுண்டிக்குளம் பகுதி வரையுள்ள கடற்பரப்பு, தீவகப் பகுதிக் கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு மிகவும் குறைவடைந்துள்ளது.
சீரற்ற காலநிலையே மீன்களின் 
பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை மற்றும் கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுவதே இதற்கான காரணமெனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ விளைமீன் 500 ரூபாவாகவும், பாரை மீன் 450 ரூபாவாகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கணவாய், நண்டு, இறால் போன்ற மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
யாழ்.நகரை அண்டிய குருநகர், நாவாந்துறை, கொட்டடி, பாசையூர் குருநகர் பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும், சாவகச்சேரி, அச்சுவேலி, பருத்தித்துறை, திருநெல்வேலி, சுன்னாகம் உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் விட மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும், யூன் மாத நடுப்பகுதி வரை மீன்களின் பிடிபாடு குறைவடைந்திருக்குமென மீனவர்கள் ^
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மீன்களின் பிடிபாடு குறைவடைந்துள்ளமையால் மீனவர்களும், மீன் வியாபாரிகளும், மீன் வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால் நுகர்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>





READ MORE - மீன் களுக்கு யாழ். மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு