இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

சனி, 24 ஜூன், 2017

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரணதர மாணவர்களும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வைத்து நேற்று(23) இரவு மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் குழுவினராகப் பிரிந்து வகுப்பறையில் 
மோதிக்கொண்டுள்ளனர்.
இதைனையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் இடத்தில் ஒன்றிணைந்த மாணவர் குழுவினர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் க.பொ.த சதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரவப்புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படுவதனால் மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெற்று வருகின்றதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக இப்பகுதியில் பொலிசாரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அதிகம் காணப்படும் கல்வி நிலையங்களும் மாணவர்களின் குழு தோதலுக்கு வழிசமைத்துள்ளதாக அப்பகுதி மக்களும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக