உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடருந்து பாதைகளில் கடப்போர் மீது நடவடிக்கை!!

புதன், 28 ஜூன், 2017


தொடருந்துப் பாதைகளில் நடப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்று இலங்கை தொடருந்துப் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன
 தெரிவித்தார்.
தமது அல்லது ஏனையவர்களது உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தான நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும், அவர்களுக்கு 3000 ரூபாவுக்கு அதிகமான தண்டப்பணம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
26 பாதுகாப்பு பிரிவு நிலையங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடல்மார்க்க தொடருந்துப் பாதைகளிலேயே அவர்கள் அதிகம் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளனர். – என்று அவர் குறிப்பிட்டார்.
கையடக்கத் தொலைபேசி பாவனை மற்றும் செல்பி எடுத்தல் என்பவற்றால் புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்கள் கடந்த பல மாதங்களாக அதிகரித்துள்ளது. அதையடுத்து தொடருந்துப் பாதைகளில் நடப்பதைத் தடுக்கும் சட்டம் கடந்த 14ஆம் திகதி 
நடைமுறைப்படுத்தப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக