தொல்லை கைத்தொலைபேசிஅழைப்புக்கள் கவனம்கவனம்!

சனி, 24 ஜூன், 2017

இருபத்தெட்டு வயதான ஜெஹான் பெரேராவின் கைத்தொலைபேசிக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பொன்று கிடைத்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பாகும்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் தொலைபேசி மணி ஒருமுறை மாத்திரம் ஒலித்து துண்டிக்கப்பட்டதாகும். அதன் வெளிநாட்டு குறியீடு+1(797) என காணப்பட்டுள்ளது. அந்த இலக்கக் குறியீடு டொமினிக் இராச்சியத்துக்குரியது.
அங்கிருநது தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த ஒருவருமே இல்லை என உணர்ந்தார். அவர் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை.
இவ்விடயம் அவர் முன்பின் அறியாத இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது குறித்து செய்த முறைப்பாடு காரணமாகவே 
தெரிய வந்தது.
அவரைப் போன்று இந்நாட்டில் பலர் இந்நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சிலர் அதுகுறித்து முறைப்பாடுகளையும் செய்துள்ளார்கள்.
அவ்வாறு கிடைத்த முறைப்பாடுகள் அனைத்திலும் அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்தே அழைப்புகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தன. தொலைபேசி மணியும் ஒரு முறையே ஒலித்துள்ளது.
ஒரு தடவை மாத்திரம் ஒலித்து தொல்லை செய்யும் இவ்வழைப்பு ‘வன் ரிங் ஸ்கேம்’ () என அழைக்கப்படுகின்றது.
இந்த தொல்லை தரும் அழைப்புக் குறித்து பொது மக்கள் அறிந்திருக்க வேண்டுமென தொலைத் தொடர்பு சேவையில் பணியாற்றும் நிபுணர் கூறுகின்றார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கணனி அவசர நடவடிக்கை குழுவின் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்திரகுப்த மேற்குறித்த தொலைபேசி அழைப்பு மோசடியான அழைப்பென்று 
குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான அழைப்புகள் தொலைபேசி உரிமையாளரின் ஆவலைத் தூண்டுவதாக அமையும். ஆனால் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதால் கட்டணத்துக்காக சில வேளைகளில் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக கட்டணம் செலவானதாக சிலர் 
தெரிவிக்கின்றார்கள்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியொன்றில் இவ்வாறான சூழ்ச்சியில் சிக்கும் கைத்தொலைபேசி உரிமையாளர்கள் தொலைபேசி இணைப்புக்கு மாத்திரம் 19.95 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் அதைவிட உரையாடல் இடம்பெறும் காலத்திற்காக 9 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உங்களது அந்த அழைப்பினூடாக மோசடியாளர்கள் பெரும் பணம் ஈட்டுவதை நீங்கள் அறிவீர்களா? இங்கு நடைபெறுவது என்னவென்றால் நீங்கள் அழைப்பினை ஏற்படுத்த வசதி செய்து 
தரும் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து தரகுப் பணத்தை அவர்கள் பெறுவதாகும்.
சூழ்ச்சிக்கு உள்ளாகுபவர்கள் செலவிட்ட பெரும் தொகைப் பணத்தை எங்கேயும் அவர்களால் மீளப் பெற முடியாது. அது சட்டவிரோதமான கொடுக்கல் என்று எங்கும் விவாதிக்க 
இடமில்லை.
அப்போது அவர்கள் ஏன் அவ்வாறான அழைப்பினை ஏற்படுத்துவீர்கள் என்றே விவாதம் செய்வார்கள்.சில வேளைகளில் உங்களுக்கு தெரியாத இலக்கங்களில் இருந்து குறுஞ் செய்திகள் 
கிடைக்கக் கூடும்.
அவ்வாறான செய்திகள் அநேகமானவற்றில் ‘தயவு செய்து விரைவில் மீண்டும் அழையுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான குறுஞ் செய்திகளுக்கு பதில் அளிக்கும்போது மேலே குறிப்பிட்ட விதமே
 அனைத்தும் இடம்பெறும்.
மோசடியான அழைப்புகள் எமது நாட்டுக்கு எந்த நாட்டிலிருந்து கிடைக்கின்றன? அவற்றின் இலக்கக் குறியீடுகள் என்ன என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
அதன்படி புரூண்டி, மலாவி, பாகிஸ்தான் மற்றும் பெலரூசியா இராச்சியங்கள் மற்றும் மேற்கிந்திய திவுகளிலிருந்துமே மோசடியான அழைப்புகள் கிடைத்துள்ளன.
268, 809,876,254 மற்றும் 473 என்னும் இலக்க குறியீட்டுகளிலிருந்து கிடைக்கும் அழைப்புகள் மோசடியானவை என அறியப்பட்டுள்ளது.
இதைத் தவிர அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு இராச்சியத்திலிருந்தும் அழைப்புகள் கிடைத்துள்ளதாக முறைப்பாடுகள்
 கிடைத்துள்ளன.
எமது நாட்டு கைத்தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலைமையிலிருந்து பாவனையாளர்களை பாதுகாக்க இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு
 நடவடிக்கை எடுத்துள்ளது.
மோசடியான அழைப்பு என கருதும் அழைப்புகளைத் தடுத்து தனது பாவனையாளர்களை பாதுகாக்க கைத்தொலைபேசிச் சேவைகளை வழங்கும் இந்நாட்டு இரண்டு தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை 
எடுத்துள்ளன.
இவ்வாறான மோசடியான உபாயங்களிலிருந்து தப்புவதற்கு கைத்தொலைபேசி பாவனையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறான அழைப்புகள் குறித்து அவதானத்துடன்
 இருக்க வேண்டும்.
தான் இதுவரை அறியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பொன்று வந்து தவிர்க்கப்பட்டிருந்தால் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த வேண்டாமென தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக