யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தபடவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணிமுதல் மாலை 5.30 வரை மின்சார விநியோகம் தடைபடுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
இதற்கமைய,யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவாந்துறை, மீனாட்சிபுரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப்பிரதேசம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு முதலான பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், சிலாவத்தை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட சில பகுதிகளிலும், வவுனியாவில், நெளுக்குளம் பாடசாலைப் பிரதேசம், கூமாங்குளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக