அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

செவ்வாய், 5 ஜூன், 2018

மாத்தளை நகரத்தில் காணப்படும் உல்லாசவிடுதியொன்றில் வைத்து நபரொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்தியால் குத்திய நபர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அவர்கள் மேலும் தெரியவருவதாவது;
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதியில் காணப்படும் விடுதியொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.இந்நிலையில், கத்தியால் குத்திய நபரை கைதுசெய்துள்ள மாத்தளை பொலிஸார் அவரை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளதாகவும், அடிக்கடி இருவரும் ஒரே வீட்டில் தங்கியதாகவும் மாத்தளை நகரில் காணப்படும் சில்லறை
 கடையொன்றில் ஒன்றாக பணியாற்றுபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.மேலும், இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் இரத்தினபுரியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் மாத்தளை நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல்தாரியை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் குறித்த சில்லறைகடையிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாகவும் இதனை விரும்பாததன் காரணமாகவே இவ்வாறு கத்திகுத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துக்குள்ளானவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகிய விடயம் குறித்து பல நாட்களாக இருவரிடையேயும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது மாத்தளை நகரிலுள்ள விடுதியில் அறையொன்றில் தங்கியுள்ள இருவரும் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் நள்ளிரவை தாண்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இறுதியாக வெளிநாட்டுக்கு செல்ல ஆயத்தமாகியவர் கத்தியால்
 தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இருவரிடையே ஏற்பட்ட மோதலில் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதியின் பணியாளர்களினால் கத்திக்குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கட்ட நிலையில் கத்திக்குத்துக்கிலக்கானவர் மாத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைத்துள்ள தகவலை கொண்டு பார்க்கையில் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களா? என்ற சந்தேகமும் 
பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையிலேயே, குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் அவரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக