யாழ். குப்பிளான் வடக்கில் இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின் திங்கட்கிழமை(11.06.2018) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இந்த மாதம்-05 ஆம் திகதி பிற்பகல் வேளையில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த வேளையில் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையமொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் தலையில் கடும் படுகாயமடைந்த குறித்த இளைஞன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாளே அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுப் பிற்பகல்(11) உயிரிழந்துள்ளார்.
யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சு. சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.இவர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனராகக் கடமையாற்றி வந்தவராவார்.
இதேவேளை, மேற்படி இளைஞனின் இழப்புக் குப்பிளானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக