மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

திங்கள், 11 ஜூன், 2018

நாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய்யின் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு நேற்று முன்தினம் அரசாங்கம் தீர்மானித்தது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேறி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் எரிபொருளின் விலைச்சுட்டெண் பிரகாரம் மண்ணெண்ணெய்யின் விலை 130 ரூபா வரை அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக