நாட்டில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

வியாழன், 1 மார்ச், 2018

இலங்கையில் கடும் வறட்சிக்கு மத்தியில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அடை மழை பெய்யும் என அதன் இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும்.
மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்காள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
இதேவேளை அம்பாறை - அக்கறைபற்று பிரதேசத்தின் ஊடாக நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக அந்த பிரதேசத்தின் 25 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக