இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் மீது கத்திக்குத்து

திங்கள், 26 மார்ச், 2018

மட்டக்களப்பு - ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்கே நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான 56 வயதுடைய நூர்முஹம்மது உஸைரா மற்றும் அவரது திருமணமாகிய மகளான 32 வலயதுடைய ஜெனீராபானு மாஹிர் 
ஆகியோர் 2016 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம்11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவின் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வருடம் 2018 பெப்ரவரி மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிந்த ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த 29 வயதுடைய உஸனார் முஹம்மது தில்ஷாத் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முதுகுப்புறத்தில் மூன்று தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கத்திக்குத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக