இருபத்தி மூண்று மருந்து உற்பத்திச்சாலைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளன. ?

வெள்ளி, 7 ஜூலை, 2017

இலங்கையில் 23 மருந்து உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட உள்ளதாக சுகாதார, போசாக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்திற்காக உள்நாட்டு ரீதியில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இவ்வாறு 23 உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட
 உள்ளன.
மருந்துப் பொருள் உற்பத்தி தொடர்பில் 23 நிறுவனங்களுடன் 33 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. இந்த நிறுவனங்களுடன் எதிர்வரும் 11ம் திகதி உத்தியோகபூர்வமாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகளை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஹொரனை, களுத்துறை, கொக்கல மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகள்
 நிறுவப்பட  உள்ளன.
இந்த மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகளின் ஊடாக சுமார் 2000 வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என
 எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு ரீதியில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதி செய்வதனால் ஏற்படும் 45 பில்லியன் ரூபா செலவினை தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சு 
அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டின் நிறைவில் இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களில் 75 வீதமான மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியம் உண்டு என அமைச்சு நம்பிக்கை 
வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக