நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று.15-09-2024. நடைபெறவுள்ளது.  
இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பரீட்சைகள் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்தில் அமருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 
பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 
புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ 
தெரிவித்துள்ளார்.  
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பரீட்சைக்கு பின்னரும் குழந்தைகளின் மன நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென உளவியலாளர்  ரூமி ரூபன் கூறுகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

சனி, 14 செப்டம்பர், 2024

 இலங்கையில்  வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா
 பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான குறித்த பெண் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார். சிலாபம் களுகம பிரதேசத்தில் 
வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே கைது
 செய்யப்பட்டுள்ளார்.
 வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களின் ஆவணங்களுடன் அவர் தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் ஒருவர் கைது

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

இலங்கைக்கு  சட்டவிரோதமான முறையில்  கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கைக்கு சட்டவிரோதமான கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் ஒருவர் கைது

நாட்டில் திடீர் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட பாவனைக்குதவாத அழகுசாதனப் பொருட்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2024

மினுவாங்கொடை அழகு நிலையமொன்றில் பெண்ணொருவருக்கு பூசப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டு தலைமுடி உதிர்ந்த சம்பவத்தையடுத்து  11-09-2024.அன்று 
மினுவாங்கொடை நகரில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 இந்த சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட பிரிவு தெரிவித்துள்ளது. 
 இறக்குமதி விவரங்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விற்பனையிலிருந்து தடைசெய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட 
அழகுசாதனப் பொருட்களை உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் இன்றி அதிக விலைக்கு விற்பனை செய்த 14 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 தடைசெய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு சிகிச்சைகள் செய்யப்பட்ட சலூன்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 இவர்களுக்கு எதிராக மினுவாங்கொட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் திடீர் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட பாவனைக்குதவாத அழகுசாதனப் பொருட்கள்

நாட்டில் கரையோரப் பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

புதன், 11 செப்டம்பர், 2024

நாட்டில் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் 
கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 


READ MORE - நாட்டில் கரையோரப் பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

கல்முனையில் அரியவகை உயிரினமான நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் கண்டுபிடிப்பு

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

கல்முனையில் நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (7.09) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில்
 பிடிக்கப்பட்டது.  
இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். (Smooth-coated Otter) இது 
தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. 
இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் 
கருதப்படுகிறது. 
இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் 
காணப்படுகிறது. 
இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது 
 குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கல்முனையில் அரியவகை உயிரினமான நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் கண்டுபிடிப்பு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் 
விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.
மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

இலங்கையின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்
 வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொணராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
.குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் இருவருக்கு கனேடிய அரசின் உயர் விருது

சனி, 7 செப்டம்பர், 2024

கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் 
பெற்றுள்ளனர்.
னேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும்.
கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம், கனடாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் இருவருக்கு கனேடிய அரசின் உயர் விருது

இலங்கையில் இந்திய முட்டைகளை நாற்பது ரூபாவிற்கு விநியோகம் செய்ய நடவடிக்கை

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

இலங்கையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் தீவை வந்தடைய உள்ளது.
 இதுகுறித்து, மாநில வணிக பல்வேறு சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வாலிசுந்தர கூறியதாவது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து. 
முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் எனக் கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் இந்திய முட்டைகளை நாற்பது ரூபாவிற்கு விநியோகம் செய்ய நடவடிக்கை

நாட்டில் பயன்படுத்தப்படும் சோப்புகள், ஷாம்பூக்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

வியாழன், 5 செப்டம்பர், 2024

நாட்டில் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சோப்புகள், ஷாம்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு 
தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
 இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சோப்புகளின் TFM பெறுமதி 
78 ஆக இருக்க வேண்டும். 
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சோப்பு உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தை சோப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.
 இந்த நிறுவனமும் ஏனைய நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட TFM பெறுமதியுடன் சோப்பை உற்பத்தி செய்கின்றனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை 
ஏற்பாடு செய்துள்ளது.
 குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்புள்ள குழந்தை சோப்பை தயாரித்ததற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிறுவனம் தொடர்ந்து தரம் குறைந்த
 சோப்பை தயாரித்தால் இதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பயன்படுத்தப்படும் சோப்புகள், ஷாம்பூக்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் வெளியீடு

புதன், 4 செப்டம்பர், 2024

நாட்டில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை
 வெளியிட்டுள்ளது.
 இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 மேலும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும், 400 கிராம் பால்மாவின் 
விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் வெளியீடு

இலங்கையில் பல பகுதிகளில் நூறு மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

இலங்கையில் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது 
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய 
மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய
 மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது  40-50 கி.மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவித்துள்ளது. 
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் பல பகுதிகளில் நூறு மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

திங்கள், 2 செப்டம்பர், 2024

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மேற்கு – மத்திய மற்றும் அண்மையாகவுள்ள வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தையும் அண்டியுள்ள தென் ஒடிஷாக் கரையையும் கடந்துள்ளது. இத் தொகுதி படிப்படியாக வலுவிழந்து
 வருகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் மிகக் 
கொந்தளிப்பான கடற்பரப்புகளும் காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு 
அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து
 பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு
 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 
பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

நாட்டில்மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த
 மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார்
.குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை