நாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

திங்கள், 27 மே, 2024

நாட்டில் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றுவதற்காக இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  
கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் 
மேலும் தெரிவித்தார்.  
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார். 
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி 20 மாவட்டங்களின் 212 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,754 குடும்பங்களில் 55,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக