நாட்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

வியாழன், 23 மே, 2024

நாட்டில்  கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இன்று (23.05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத்
 தெரிவித்தார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், தற்போது இலங்கையில் அபிவிருத்தியடைந்த தேசிய வைத்தியசாலைகளாக கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள்
 மட்டுமே உள்ளன.  
இதன்படி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  
சுகாதார நிலையத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கராப்பிட்டிய வைத்தியசாலை அதிகளவு பங்களிப்புச் செய்வதாகவும் தெரிவித்த அமைச்சர், ருஹுனு 
பல்கலைக்கழகத்தின் மருத்துவ பயிற்சி வைத்தியசாலையாக வருடாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும்
 குறிப்பிட்டார்.  
இதேவேளை, பொத்துவில் ஆரம்ப வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக