நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

சனி, 18 மே, 2024

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு 
ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.
வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுக்கு கூறியுள்ளார்.
தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக 
ஏற்பாடு செய்தனர்.
விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டதுடன் , இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக