பல பகுதிகளில் மலையகத்தில் மின் துண்டிப்பு : ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

சனி, 25 மே, 2024

மோசமான காலநிலை காரணமாக மலையக புகையிரதத்தில் இரவு நேர அஞ்சல் புகையிரதம்.25-05-2024. இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே இந்த தகவலை
 வெளியிட்டுள்ளார். 
இதன் காரணமாக  கொழும்பில் இருந்து பதுளைக்கும் பதுளையில் இருந்து கொழும்புக்கும் இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல் இரவில் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 20 இடங்களில் ரயில் தண்டவாளத்தில் 
மரங்கள் விழுந்து கிடப்பதாகவும், ரயில்வே சிக்னல் அமைப்பை செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்
 அவர் கூறுகிறார். 
மலையகத்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால், சிக்னல்கள் இயங்கவில்லை என்றும்,புகையிரத கடவையில் பயணிக்கும் போக்குவரத்து சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.  
புகையிரத கடவைகளை கடக்கும்போது சிக்னல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ அல்லது சிகப்பு சிக்னல் மட்டும் தொடர்ந்து மின் மணிகள் ஒலித்துக்கொண்டாலோ சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக