சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

திங்கள், 20 மே, 2024

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை
 நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
 குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக