அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்
வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை
செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு
மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி
செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக