நாட்டில் வடமாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பு

திங்கள், 9 அக்டோபர், 2023

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமான மெசிடோ நிறுவனம் வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் 
ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து 
வருகின்றது. 
 அந்த வகையில் கருவாடு பதனிடுதல், பனை உற்பத்தி பொருட்கள்,சவர்க்கார உற்பத்தி என  இன்னும் பல சிறு தொழில் பயிற்சிகளை 
வழங்கி வருகிறது. 
 இப் பயிற்சிகளின் ஊடாக பயனாளிகள் தங்களுடைய உற்பத்திகளை அதிகரித்து வருமானம் ஈட்டி வரும் நிலையில், இலங்கை 
கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் சந்தை வாய்ப்பு ஒன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 
இவ் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் முகமாக பயனாளிகளான தொழில் முயற்சியாளர்களுக்கு தங்களுடைய உள்ளூர்
 உற்பத்திகளான கருவாடு, சவர்க்கார் உற்பத்திகள்,
 பனை உற்பத்தி பொருட்களை கண்டிக்கு கொண்டு சென்று மூன்று நாட்கள் கடந்த (6,7,8) ஆகிய  திகதிகளில் சந்தை வியாபாரத்தில் 
ஈடுபட்டிருந்தனர். 
அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பல இலட்சம் லாபம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு உள்ளுர் உற்பத்தித் தொழில் முயற்சியாலர்களை ஊக்குவித்த நிறுவனமான மெசிடோ நிறுவனத்திற்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது. 

 அது மட்டும் இன்றி சர்வதேச சந்தை வாய்ப்பு மற்றும் கண்காட்சி இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை (Vietnam,Hanoi. 2023.October 30 to November 02 2023) வியட்நாம் நாட்டில் நடைபெற இருப்பதும் 
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக