வெள்ளத்தில் கொழும்பு மாநகரம் மூழ்குவதை தடுக்க தேவையான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சனி, 21 அக்டோபர், 2023

கொழும்பு மாநகரை வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான 
திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு 
பரிந்துரைத்துள்ளது. 
அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு இந்த உத்தரவை 
பிறப்பித்துள்ளது. 
இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் 
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக
 பாதிக்கப்பட்டுள்ளன.  
நகரவாசிகள் மட்டுமின்றி நகருக்கு நாள்தோறும் வரும் இலட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தின் வழிவகைகள் குழுவின் கவனத்துக்கு கொண்டு 
செல்லப்பட்டது.  
இந்நிலையில்கொழும்பு மாநகரம் மழைநீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு குழு பரிந்துரை செய்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக