நாட்டில் மாத்தறை மாவட்டத்திற்கு மின் விநியோகம் இடைநிறுத்தம்

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

நாட்டில்  மாத்தறை பகுதியில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மாத்தறையில் உள்ள மின் துணை மின்நிலையத்தில் இருந்து மின் இணைப்பை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.  
இது குறித்து  X இல் பதிவிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, “மாத்தறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சார விநியோகம், தெனியாய மற்றும் பெலியத்தவில் உள்ள கிரிட் துணை மின் நிலையங்களில் இருந்து விரைவில் மீண்டும் இணைக்கப்படும் 
என்று கூறினார். 
பணிநிறுத்தம் நிறைவடைந்ததையடுத்து, மாத்தறை கிரிட் துணை மின்நிலையத்திலிருந்து CEB பணியாளர்களை வெளியேற்றுவதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் மற்றும் பணியாளர்கள் 
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்
 மேலும் கூறினார்.  
நிலவும் சீரற்ற வானிலை காரணமாகமாத்தறை மாவட்டத்தின் பலப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை 
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக