இலங்கையில் .04-10-2023.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின்
தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ
கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,470 ரூபாவாக
பதிவாகியுள்ளது.
அதேபோல் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய
விலை 1,393 ரூபாவாகும்.
2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக