அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

திங்கள், 30 அக்டோபர், 2023

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் 29-10-2023.அன்று  மாலை 
உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் 
குறித்த 23 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில்
 நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் 
ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக