நாட்டில் 2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் “உலகப் பள்ளி உணவுத் திட்டத்தின்” முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டில், 4.1 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய இலவச பள்ளி மதிய உணவு வழங்கப்படும் என்றும், பட்ஜெட் ஒதுக்கீட்டை 204 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும்
அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி அடுத்த ஆண்டு அரசுப் பள்ளி சத்துணவு உதவி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்ய எடுக்கப்பட்ட கொள்கை முடிவை சட்ட வரைவுத் துறை ஏற்கனவே தயாரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
உலக உணவுத் திட்டம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID) மற்றும் உள்ளூர் வர்த்தகத் துறை மற்றும்
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவை இந்தப் பள்ளி
உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக